மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=17484
Export date: Sun Sep 23 21:33:49 2018 / +0000 GMT

டிரைவர் இன்றி ஓடும் மெட்ரோ ரெயில்கள்


சென்னை, நவ.17: சென்னையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட பணி இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் போது டிரைவர் இல்லா ரெயில்கள் சென்னையில் ஓடத்துவங்கும் என்று திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


2-வது மெட்ரோ ரெயில் திட்டம் மாதவரத்தில் இருந்து சோழிங்க நல்லூர் வரையும் மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து சோழிங்க நல்லூர் வரையில் 108 கிலோ மீட்டர் தொலைவுக்கு போடப்பட உள்ளது.
104 ரெயில் நிலையங்களுடன் ரூ.44,000 கோடி மதிப்பீட்டில் செயல் படுத்தப்பட உள்ள இத்திட்டம் பற்றிய இறுதி அறிக்கையை சிஎம்எல்ஆர்ஐ ஜப்பான் நிறுவனத்திடம் தாக்கல் செய்துள்ளது.
2018 முதல் காலாண்டில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பு இதற்கான முதல்கட்ட நிதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


இந்த நிலையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் டிரைவர் இல்லாமல் தானியங்கி தொழில்நுட்ப அடிப்படையில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரெயிலின் இயக்கத்தை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பதற் கான வசதி செய்யப்படும்.
இந்த கொள்கைக்கான இறுதி அறி விப்பை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் அறிவிக்கும் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக பாதுகாப்பு  சான்றிதழ் மற்றும் தேவையான ரெயில் இயக்க தொழில்நுட்ப பிரிவுகள் ஆகியவை பற்றிய அறிக்கை தயாரிக்கப்படும்.


டிரைவர் இல்லா ரெயில்களில் டிரைவருக்கான அறையில் பயணிகள் நிற்பதற்கு வசதி செய்யப்படும்.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் மேலும் கூறுகையில், ஓட்டுநர் இல்லாத ரெயிலில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். தற்போது ஒவ்வொரு பகுதியிலும் சிக்னல் அமைக்கப்படும் முறையை மாற்றி மத்திய கட்டுப்பாட்டு அறையிலேயே சிக்னல் முறையும் அமைக்கப்படும் என்றனர்.


தற்போது முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ரெயில்களில் டிரைவர்களின் பணி மிக குறைவானதாகவே இருக்கிறது என்றும், ரெயில் இயக்கம் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் நடப்பதாகவும், ஓட்டுநர்கள் கதவு களின் இயக்கம் மற்றும் ஸ்டார்ட் பட்டனை அழுத்துவது போன்ற வற்றை மட்டுமே செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Post date: 2017-11-17 05:11:43
Post date GMT: 2017-11-17 05:11:43

Post modified date: 2017-11-17 05:42:58
Post modified date GMT: 2017-11-17 05:42:58

Export date: Sun Sep 23 21:33:49 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com