This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
[ http://www.maalaisudar.com ] Export date: Wed Feb 20 7:25:39 2019 / +0000 GMT |
டிரைவர் இன்றி ஓடும் மெட்ரோ ரெயில்கள்
2-வது மெட்ரோ ரெயில் திட்டம் மாதவரத்தில் இருந்து சோழிங்க நல்லூர் வரையும் மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து சோழிங்க நல்லூர் வரையில் 108 கிலோ மீட்டர் தொலைவுக்கு போடப்பட உள்ளது. இந்த நிலையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் டிரைவர் இல்லாமல் தானியங்கி தொழில்நுட்ப அடிப்படையில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரெயிலின் இயக்கத்தை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பதற் கான வசதி செய்யப்படும். டிரைவர் இல்லா ரெயில்களில் டிரைவருக்கான அறையில் பயணிகள் நிற்பதற்கு வசதி செய்யப்படும். தற்போது முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ரெயில்களில் டிரைவர்களின் பணி மிக குறைவானதாகவே இருக்கிறது என்றும், ரெயில் இயக்கம் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் நடப்பதாகவும், ஓட்டுநர்கள் கதவு களின் இயக்கம் மற்றும் ஸ்டார்ட் பட்டனை அழுத்துவது போன்ற வற்றை மட்டுமே செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். |
Post date: 2017-11-17 05:11:43 Post date GMT: 2017-11-17 05:11:43 Post modified date: 2017-11-17 05:42:58 Post modified date GMT: 2017-11-17 05:42:58 |
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com |