Home » சினிமா » கஜோலை கலாய்க்காதீங்க: கமல் டுவிட்

கஜோலை கலாய்க்காதீங்க: கமல் டுவிட்

கமலுடன் எடுத்த புகைபப்படத்தை வெளியிட்ட கஜோலை நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில் கஜோலுக்கு ஆதரவாக கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த 23வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட அமிதாப் பச்சன் மற்றும் கமலஹாசனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கஜோல் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அதில் ஜாம்பவான்களுடன் செல்பி நேரம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து அது செல்பி இல்லை என்று நெட்டிசன்கள் கஜோலை கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில் கஜோலுக்கு ஆதரவாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் நான் செல்பிக்கு ரசிகன் இல்லை. ஆனால் படத்தில் இருப்பவர்களுக்கு ரசிகர். கஜோலை கிண்டல் செய்யதீர்கள் என்று தெரிவித்து அந்த படத்தை தானும் பகிர்ந்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*