Home » சென்னை » ஃபோர்டு: புதிய ஈகோஸ்போர்ட் கார்

ஃபோர்டு: புதிய ஈகோஸ்போர்ட் கார்

சென்னை, நவ.13: ஃபோர்டு நிறுவனம், ரூ.7 லட்சத்து 31 ஆயிரத்து 200 என்ற விலையில் அதன் ஸ்டைலான, சக்திவாய்ந்த மற்றும் நேர்த்தியான இணைப்பு வசதிகொண்ட புதிய ஈகோஸ்போர்ட் காரை அறிமுகம் செய்திருக்கிறது.

புதிய ஈகோஸ்போர்ட், 1600க்கும் அதிகமான புதிய பாகங்களைக் கொண்டு விரிவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. உறுதியான புதிய தோற்றம், நேர்த்தியான உட்புற அலங்காரத்தில் மாற்றம், நுண்ணறிவுமிக்க பல தொழில்நுட்பங்கள் மற்றும் ஒரு புதிய இன்ஜின் ஆகியவை உள்ளடக்கிய இது, அதிக சக்தியையும், திறனையும் வழங்குகிறது.

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனுராக் மெஹ்ரோத்ரா இது குறித்து பேசுகையில், ‘குதூகலம், ஸ்டைல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வலுவான கலவையோடு புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட் வெளிவருகிறது.

இவ்வகையினத்தில் மிகச்சிறந்த ஆற்றல், பாதுகாப்பு, வசதி மற்றும் பணத்திற்கேற்ற மதிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இது, அதே விலையில் குறிப்பிடத்தக்க அளவு அதிக திறனையும், வசதிகளையும் வழங்குகிறது.

இதன் முந்தைய வெளியீட்டைப் போலவே ஃபோர்டு வழங்கும் மற்றுமொரு புரட்சிகர தயாரிப்பான இது, காம்பாக்ட் எஸ்யூவிகளின் தர அளவுகோலை சிறப்பாக உயர்த்தி இருக்கிறது’ என்று கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*