மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=16199
Export date: Sat Dec 15 15:59:50 2018 / +0000 GMT

ஐபோன் மூலம் பணம் அனுப்பும் புதிய வசதி


புதுடெல்லி, நவ.5: வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஆப்பிள் ஐபோன்களில் வாய்ஸ் மூலம் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு பணம் அனுப்பும் புதிய வசதியை முதல்முறையாக ஐசிஐசிஐ வங்கி தொடங்கியுள்ளது.

மணி டூ இந்தியா என்ற பெயரில் ஐபோன்களுக்கான செயலியை அறிமுகப்படுத்தியுள்ள ஐசிஐசிஐ வங்கி, யாருக்கு பணம் அனுப்ப வேண்டும், எவ்வளவு தொகையை அனுப்ப வேண்டும் என்பதை உச்சரித்தாலே போதும் என்று கூறியுள்ளது.

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்த மணி டூ இந்தியா செயலியை பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், அத்துடன் இந்தியாவில் யார் யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதை அவர்களது வங்கிக் கணக்குடன் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன்பின்னர், மணி டூ இந்தியா செயலியை திறந்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்பதை உச்சரித்து, அதை உறுதி செய்தாலே அவர்களுக்கு பணம் சென்றுவிடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Post date: 2017-11-05 08:46:26
Post date GMT: 2017-11-05 08:46:26

Post modified date: 2017-11-05 08:46:26
Post modified date GMT: 2017-11-05 08:46:26

Export date: Sat Dec 15 15:59:50 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com