w
Home » Flash News » நவம்பர்-7ல் அதிரடி திருப்பங்கள்

நவம்பர்-7ல் அதிரடி திருப்பங்கள்

சென்னை, அக்.26: வருகிற நவம்பர் 7ந் தேதி தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. அன்று தான் கமல் தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

இரட்டை இலை சின்னம் பற்றிய முக்கிய தீர்ப்பும் அன்று வர இருக்கிறது. திமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதியும் வெளியாக இருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டு அரசியல் திசை மாறிப் போனது. ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு பலரும் போட்டி போடுகிறார்கள்.

தொடர்ந்து ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பவராக மட்டுமே இருந்து வரும் நிலையில் கமலஹாசன் திடீரென அரசியல் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். வரும் நவம்பர் 7-ந் தேதி தனது பிறந்தநாளில் அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக வார இதழ் ஒன்றில் எழுதியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தனக்கு போட்டியில்லை என்று கருதிய மு.க.ஸ்டாலின் கமலஹாசன் போன்றவர்களின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்து மீண்டும் ஒரு எழுச்சி பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள இருக்கிறார். திமுகவின் தொடர் தோல்விக்கு 2ஜி ஊழல் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இப்போது இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நவம்பர் 7-ல் தீர்ப்பு தேதி வெளியாக உள்ளது.

இது திமுகவின் எதிர்காலத்தை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நவம்பர் 7-ந் தேதி திமுக வட்டாரம் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்தில் மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்
படுகிறது. இதனால் ஸ்டாலின் தனது எழுச்சி பயணத்தை தள்ளி வைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பிளவுபட்டதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. பிரிந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி இணைந்து இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி உள்ளனர்.

இதற்கிடையே தினகரன் அணி தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால், யாருக்குமே அது கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அதனை முடக்க முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வரும் 30-ந் தேதி தேர்தல் ஆணையம் இதன் மீது இறுதி விசாரணை நடத்துகிறது. நவம்பர் மாதம் 7-ந் தேதி இறுதி தீர்ப்பு வெளியாகும் என்று அதிமுக வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் ஆர்கே நகர் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சி தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஆகவே நவம்பர் 7-ந் தேதி தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்துமா? அல்லது புஷ்வானம் ஆகுமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*