Home » Flash News » மகராஷ்டிராவில் லாரி கவிழ்ந்து 11 பேர் பலி

மகராஷ்டிராவில் லாரி கவிழ்ந்து 11 பேர் பலி

மும்பை,அக்.21:மராட்டிய மாநிலம் சங்லி மாவட்டத்தில் உள்ள டாஸ்கோன் – கவதே மஹாகல் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரியில் இருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து மராட்டியத்தில் உள்ள காரட் பகுதிக்கு டைல்ஸ் ஏற்றிக்கொண்டு லாரி வந்ததாக கூறப்படுகிறது. கவேதமங்கல் என்ற பகுதியில் வேகமாக சென்ற லாரி, வளைவில் திரும்பியபோது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததால், அதில் பயணித்த தொழிலாளர்கள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்தில் காயமடைந்த 11 பேரை மீட்டு, மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*