Home » மருத்துவம் » சர்க்கரை நோய்க்கான ‘சிறப்பு பிரிவு’ துவக்கம்

சர்க்கரை நோய்க்கான ‘சிறப்பு பிரிவு’ துவக்கம்

சென்னை, அக்.13: சென்னையில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையத்தில் இந்நோய்க்கான ‘சிறப்பு பிரிவு’ துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நீரிழிவு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நீரிழிவு நோய்க்கான சிறப்பு பிரிவை டாக்டர் மோகன்ஸ் மருத்துவமனை மட்டுமே துவக்கி உள்ளது. இந்த பிரிவை சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தின் துணை ஆணையர் பரத்ஜோஷி துவக்கி வைத்தார்.

இங்கிலாந்தில் உள்ள தண்டி பல் கலைக்கழகத்தின் நீரிழிவு நோய் துறைக்கான தலைவர் காலின் பால்மர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி பவுண்டேஷனுக்கும், இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் உள்ள தண்டி பல்கலைக்கழகத்திற்கும் இடையே நீரிழிவு நோய் தொடர்பான ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு மருத்துவ ஆலோ சனைகள் வழங்குவதற்காக இந்தோ – இங்கிலாந்து கூட்டுக்குழு செயல் பட்டு வருகிறது.
இது குறித்து டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.மோகன் கூறுகையில், நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தில் தற்போது முன்னேற்றம் உள்ளது. வருங்காலத்தில் இந்நோய்க்கான சிகிச்சை முறையில் புரட்சி ஏற்படும் நிலை உள்ளது.

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை பெற்றுள்ளனர். அவர்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் எங்கள் மருத்துவமனையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவு செயல்படும் என்று கூறினார். இது குறித்து தண்டி பல்கலைக்கழ கத்தின் நீரிழிவு பிரிவு தலைவர் காலின் பால்மர் கூறுகையில், தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள் அமலில் உள்ள நிலையில் சர்க்கரை நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.
இந்தியாவில் சர்க்கரை நோய் ஏற்படு வதற்கான சூழ்நிலைகள் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு எங்களது பல்கலைக்கழகமும், மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி பவுண்டேஷனும் இணைந்து செயல்பட்டு நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*