Home » சென்னை » அரசு ஊழியர் அதிகபட்ச சம்பளம் ரூ.2,25,000

அரசு ஊழியர் அதிகபட்ச சம்பளம் ரூ.2,25,000

சென்னை, அக்.12: முதல்வர் அறிவித்த சம்பள உயர்வு அறிவிப்பால் அரசு ஊழியர்களுக்கு அதிகபட்ச சம்பளம் ரூ.2,25,000 வரை கிடைக்கும். அதே போல் இளநிலை உதவியாளருக்கு ரூ.47,485 கிடைக்கும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14,719 கோடி செலவு ஏற்படும் என தெரிகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனி சாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

புதிய ஊதிய உயர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இப்போதுள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.77,000 என்ற அளவில் உள்ளது.
புதிய ஊதிய விகிதப்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700- மாகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.2.25 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஊதியக் குழுக்களால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வீட்டு வாடகைப்படி உள்பட பல்வேறு படிகளுக்கான உயர்வைவிட இந்த முறை அதிகமான உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு கடைப்பிடித்த அதே விகித முறையில் ஊதியத்தை உயர்த்தி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் என்பது குறைந்தபட்சம் ரூ.7,850-ஆக இருக்கும். எனினும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் பணி நிலைகளுக்கு ஏற்ப அதிகபட்ச ஓய்வூதியம் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 500-ஆகவும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.67,500-கவும் இருக்கும்.

ஓய்வு பெறும் போது அளிக்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலர், அனைத்துத் துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.3,000-மாகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100-மாகவும் திருத்தி அமைக்கப்படும். ஆண்டுக்கு ரூ.14,719 கோடி செலவாகும்.

தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும்.
இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் அளிக்கப்படும்.

அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவு அரசுக்கு ஏற்படும். இந்த அறிவிப்புகளால் சுமார் 12 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களும், சுமார் 7 லட்சம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும் பயனடைவர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*