Home » சென்னை » ரூ.174 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம்

ரூ.174 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம்

சென்னை, அக்.12:  காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ரூ.174 கோடி மதிப்பிலான புதிய பள்ளி கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது வருமாறு:-

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள ரூ.61 கோடியே 58 லட்சம் மதிப்பிலான பேரிடர் மீட்பு மையம், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் 8 தகவல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

நபார்டு கடன் உதவி திட்டத்தின் கீழ் அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 39 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள் நீலகிரி, பெரம்பலூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 68 உயர்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் மதுரை மாவட்டம் மேலூரில் நூலக கட்டிடம் என மொத்தம் ரூ.173 கோடியே 84 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான பள்ளி துறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இது தவிர மேம்படுத்தப்பட்ட தமிழ் இணையக்கல்வி இணையதளம், தமிழ் இணையம் மென்பொருள் தொகுப்பு-2 என்னும் மென்பொருள் தொகுப்பு ஆகியவற்றை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.

இ-மடல் இதழ் வெளியீடு

தமிழ் இணைய கல்வி கழகத்தின் தமிழ் மின் நூலகம் மாதம் இரு முறை வெளிவர உள்ள இ-மடல் என்னும் இதழையும் வெளியிட்டார். இதன் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடியும்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*