Home » சென்னை » வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

காஞ்சிபுரம், அக்.12: அதிமுக அம்மா அணி சார்பில் காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் மறைந்த ஜெயலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என நகர மாணவர் அணி சார்பில் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் பொது மக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் இ.ரா. பெருமாள், நகர செயலாளர் புள்ளட் பரிமளம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி.என். சந்திரன், வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய செயலாளர் வேளியூர் தனசேகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர். நாராணயணசாமி, தாஸ், பச்சையப்பன், சந்திரமௌலி, நாகராஜன், பழக்கடை சுப்பிரமணி, இரும்பு கடை, தனசேகர், நகர விவசாய பிரிவு மோகன், பெயின்டர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி நகர மாணவரணி செயலாளர் ஆர்.கே. செந்தில் சிறப்பாக செய்திருந்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*