Home » சினிமா » கிடு கிடுவென உயரும் நிக்கி கல்ராணி மார்கெட்

கிடு கிடுவென உயரும் நிக்கி கல்ராணி மார்கெட்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.
அதற்கு முன்பே அவர் கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து பல ரசிகர்களை பெற்றிருந்தார்.

டார்லிங் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அவர் தமிழில் கவனம் செலுத்த தொடங்கினார். இரண்டே வருடத்தில் நிக்கி கல்ராணி தமிழில் 9 படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ஹர ஹர மகதேவகி படத்தில் அவர் நடித்திருந்தார். இப்படம் இளம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக இவர் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்த கீ படமும் வெளியாவதற்கு தயாராக உள்ளது.

ஹர ஹர மகாதேவகி படத்திற்கு பிறகு அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது.
தமிழில் முன்னணி நடிகைகளான திரிஷா, நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் என அனைவரும் திரைக்கு அறிமுகமாக 10 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது அவர்கள் வகித்த கனவு கன்னி இடத்தை நிக்கி கல்ராணி தற்போது பிடித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*