Home » சென்னை » அஜித் திரைப்பட தயாரிப்பாளர் பாடகி ஆனார்

அஜித் திரைப்பட தயாரிப்பாளர் பாடகி ஆனார்

‘என்னை அறிந்தால்’ ‘வேதாளம்’ மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டுடிருக்கும் ‘கருப்பன்’ ஆகிய திரைப்படங்களின் இளம் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர் தற்போது நில்க்ரிஸ் ட்ரீம் என்டெர்டைன்மெண்ட் தயாரிக்கும் கூத்தன் என்ற திரைப்படத்தில் பாலாஜி இசையில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார்.

இது குறித்து பட இயக்குனர் கூறுகையில், படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். இதில் பிரபல நடிகை ரம்யா நம்பீசன் ஒரு குத்து பாடல் பாடியுள்ளார். தற்போது கர்னாடிக் கிளா
சிக்கல் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைலில் டூயட் பாடலை ஐஸ்வர்யா பாடி அசத்தியிருக்கிறார். முதலில் ஒரு பாடல் பாட வேண்டும் என்று தான் நாங்கள் அழைத்தோம்.

ஆனால் அவர் அந்த பாடல் பாடிய விதம் குரலின் இனிமை, பட தயாரிப்பாளர் நில்க்ரிஸ் முருகனுக்கும் இசை அமைப்பாளருக்கும் மிகவும் பிடித்துப்போனது. எனவே மற்றொரு பாடலையும் சேர்த்து இவரே பாடட்டும் என்று முடிவு செய்தோம்.

ஐஸ்வர்யா சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தெலுங்கு படத்தில் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*