Home » சினிமா » ரசிகர்களை கிறங்கடித்த ராய் லட்சுமி

ரசிகர்களை கிறங்கடித்த ராய் லட்சுமி

சௌகார் பேட்டை, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகை ராய் லட்சுமி தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கில் கைதி எண் 150 படத்தில் நடித்தார்.
தற்போது பாலிவுட்டுக்கு சென்று ஜூலி-2 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானபோது அதில் இதுவரையில்லாத அளவுக்கு ராய் லட்சுமி கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்த டிரைலரை 4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் பாடல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கொய் ஹௌஸ்லா டோ என்று தொடங்கும் இப்பாடல் கட் செய்யப்பட்ட வீடியோ வெளியான சில மணி நேரத்தில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இந்த பாடலை அனுபம் நாயர் பாடிஉள்ளார்.

இன்று பகல் 11 மணிக்கு இப்பாடலின் முழு வீடியோ வெளியானது.
ஜூலி-2 திரைப்படம் அக்டோபர் 6-ந்தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் விரைவில் அமிர் கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படம் ரிலீசாக உள்ளதால் இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போய் உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*