Home » தமிழ்நாடு » என் மீது பொய் குற்றச்சாட்டு: விக்கிரமராஜா போலீசில் புகார்

என் மீது பொய் குற்றச்சாட்டு: விக்கிரமராஜா போலீசில் புகார்

சென்னை, அக்.12: சங்கத்தின் மீதும் என்மீதும் பொய் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் சங்க நிர்வாகிகளுடன் சென்று புகார் மனு அளித்த விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நெல்லை நாடார் பள்ளியில் 1,347 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் நிர்வாக பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டபின், எங்களது கடின உழைப்பின் விளைவாக தற்போது 5,000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ரூ.5 கோடி மதிப்பிலான பள்ளி மற்றும் சங்கத்தின் சொத்தினை பள்ளியின் முன்னாள் நிர்வாகிகள் அபகரிக்க முயல்கின்றனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், என் மீது பொய்புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் அளித்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளேன். ஏற்கனவே, என்மீது இது போன்று பல்வேறு வழக்குகள் பதிவாகி அது பொய் என்று போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*