Home » Flash News » ஆருஷி கொலை வழக்கில் தாய்-தந்தை விடுதலை

ஆருஷி கொலை வழக்கில் தாய்-தந்தை விடுதலை

சென்னை, அக்.12: உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் 2008-ல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி மற்றும் சமையல்காரர் ஹேம்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஆருஷியின் தாய், தந்தையரை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பல் மருத்துவர்களான ராஜேஷ் கல்வார் மற்றும் அவரது மனைவி முகுல் கல்வார் ஆகியோரது ஒரே மகள் ஆருஷி வீட்டில் சமையல்காரருடன் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக தாய், தந்தையர் கைது செய்யப்பட்டு காசியாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மகளை கொலை செய்ததற்காக மருத்துவ தம்பதியினர் இருவருக்கும் காசியாபாத் நீதிமன்றம் 2013-ல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இருவரையும் விடுவித்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சந்தேகத்தின் பலன் அடிப்படை யில் இருவரும் விடுவிக்கப்பட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கீழ்கோர்ட் வழங்கிய தீர்ப்பில் நிறைய குறைகள் இருப்பதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியிருப்பதுடன் மருத்துவ தம்பதியினர்- இருவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. இருவரும் நாளை விடுதலை செய்யப்படுவார்கள் என்று தஸ்னா சிறை கண்காணிப்பாளர் மவுரியா கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*