Home » முக்கிய செய்தி » டெங்கு ஒழிப்புக்கு அதிகாரிகள் நியமனம்

டெங்கு ஒழிப்புக்கு அதிகாரிகள் நியமனம்

சென்னை, அக்.12:  டெங்கு கொசுவை ஒழிக்க அடுத்த 15 நாட்களுக்கு நீர் தேங்கும் இடங்கள், குப்பை கூளங்கள் மற்றும் கட்டுமான பகுதிகளில் மாநகர ஆணையர், கலெக்டர்கள் தலைமையில் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதை கண்காணிப்பதற்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

டெங்கு மற்றும் பருவகாலங்களில் ஏற்படும் பல்வேறு காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர், நீலோபர் கபில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னையில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில், டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள நீர் தேங்கும் இடங்கள், குப்பை கூளங்கள், கட்டுமானப் பகுதிகள் ஆகியவற்றை முழுமையாக துப்புரப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இப்பணிகளை, வட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்கள் தினந்தோறும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கூறிய நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறுவதை கண்காணித்து உறுதி செய்து தினசரி அறிக்கை மாவட்ட கலெக்டர் அனுப்ப வேண்டும்.

இப்பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அனைத்து இடங்களிலும் கூடுதல் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

சுத்தம் செய்யப்படாத இடங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டால் நிலத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணிகளை உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*