Home » சினிமா » கொடிவீரன் படத்திற்கு புதிய சிக்கல்

கொடிவீரன் படத்திற்கு புதிய சிக்கல்

சென்னை, அக்.12:  சசிகுமார் தயாரித்து நடித்துள்ள கொடிவீரன் படத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. முந்தைய படத்திற்கு கொடுத்த பணத்தை வைத்து இந்த படத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க பைனான்சியர்கள் சசிகுமார் கழுத்தை நெரிக்க தொடங்கி உள்ளனர்.

நடிகர் சசிக்குமார் தற்போது நடித்து முடித்துள்ள படம் கொடிவீரன். அவர் நடித்தகுட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா மீண்டும் கொடிவீரன் படத்தை இயக்கி உள்ளார். சசிக்குமார் நாயகனாக நடித்து வெளியான படங்களில் 20 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டிய படம் குட்டிப்புலி.

குட்டிப்புலி போன்று கொடிவீரனும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகும் என தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் நம்புகின்றனர். தீபாவளிக்கு மெர்சல் வருவதால் மற்ற படங்கள் எதுவும் வரவில்லை.

கொடிவீரன் தீபாவளிக்கு உறுதியாக வருகிறது என தயாரிப்பு தரப்பு அறிவித்து உள்ளது. கொடிவீரன் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமை வாங்குவதற்கு கடுமையான போட்டி நிலவியது. இதற்கு முன் வெளிவந்த பலே வெள்ளையதேவா தோல்வி படமாக இருந்தாலும் கொடிவீரன் 12 கோடிக்கு வியாபாரமாகி உள்ளது.இப்படத்தின் உரிமையை 12 கோடிக்கு கோவையை
சேர்ந்த சிதம்பரம் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் முந்தைய படங்களுக்கு பைனான்ஸ் வாங்கிய தொகையில் பாக்கி இருப்பதால் அதனை திருப்பிக் கேட்டு மதுரையை சேர்ந்த விநியோகஸ்தர்கள் சசிக்குமாருக்கு நெருக்கடி கொடுத்து கழுத்தை நெரிக்க தொடங்கியுள்ளனர்.பணம் தராவிட்டால் படத்தை தங்களிடம் தான் கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் சசிகுமார் நெருக்கடியில்
சிக்கித்தவிக்கிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*