Home » முக்கிய செய்தி » ரஜினிக்கு கமல் பதிலடி

ரஜினிக்கு கமல் பதிலடி

சென்னை,அக்.12: சிவாஜி மண்டபம் திறப்பு விழாவில் தன்னை விமர்சித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தன்னை பிஜேபி ஆதரவாளராக சித்தரிக்க சிலர் முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனின் அரசியல் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவர்கள் தங்களது பிறந்த நாளின் போது புது கட்சி தொடங்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நடந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் வெற்றியடைய வேண்டும் என்றால் சினிமா, பேர், புகழ், செல்வாக்கு மட்டும் இருந்தால் போதாது. அதற்கு மேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். எனக்கு அது என்ன என்ற சத்தியமாக தெரியாது. கமல்ஹாசனுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். தெரிந்தாலும் அவர் எனக்கு சொல்லமாட்டார் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சிக்கிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல் வாரஇதழ் ஒன்றில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
அரசியலில் வெற்றி என்றால் என்ன? தனிக்கட்சி தொடங்கி, அடுத்து வரும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி, பெரும்பான்மையான இடங்களில் வென்று, முதல்வராகவோ, பிரதமராகவோ ஆவதா? அதையே வெற்றியாக வைத்துக்கொண்டாலும் அந்த வெற்றிக்கான அர்த்தம் என்ன? வெற்றிபெறவைத்த மக்களை, கையேந்த விடாமல் சுயமரியாதையுடன் வாழவைப்பது தானே? ஆனால், இங்கு அரைநூற்றாண்டு வெற்றிகளை கொண்டு எத்தனை பேரை மேம்படுத்தியிருக்கிறோம்? யாரும் மேம்பாடு அடையவில்லை என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

அப்படியெனில் அவர்களின் வெற்றி என்பதே அர்த்தமற்றுப்போகிறது என்பது தானே பொருள். இந்த வகையான வெற்றியை யார் பெற்றிருந்தாலும், அப்படி ஒரு வெற்றி தேவையே இல்லை என்பதே என் கருத்து. அரசியலில் உண்மையான வெற்றி என்பது அரசியலில் இருந்தும் தேர்தலில் போட்டியிடாத காந்தி, பெரியார் இவர்களின் வெற்றிதான் காலத்துக்கும் நிலைத்திருக்கும் வெற்றி.

நீங்கள் சொல்லும் வெற்றியாளர்கள் எத்தையோ பேரை மக்கள் மறந்தும் காலப்போக்கில் மறுத்தும் இருக்கிறார்கள். அம்பேத்கர் தேர்தலில் தோற்றது மாபெரும் சரித்திரத்தின் ஆரம்பம். இவர் மூவரையும் மறக்கவோ மறுக்கவோ முடியுமா? இவர்கள் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள்.

இந்த வரிசையில் ஆர். நல்லக்கண்ணு சேர்க்க வேண்டிய இன்னும் ஒருவர். அவர் நின்ற தேர்தல்களில் ஒன்றில்கூட வென்றதே இல்லை. இன்றும் அவர் சமூக பணியில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்.எதற்கு.. நீங்கள் சொன்ன வெற்றியை மக்கள் அவருக்குத் தருவார்கள் என்றா? அவர் தன்னையும் வென்று மக்கள் மனங்களையும் வென்று வெகுநாள்காளாகிவிட்டன. மக்களுடன் ஆத்மார்த்தமாக உரையாடும் அவரின் அந்த அன்பு தானே அரசியலின் உண்மையான வெற்றி.

என்னை பொறுத்தவரை அரசியல் வெற்றி என்பது இதுதான். பேரவை உறுப்பினர், முனைவர், பின்னவர், முதல்வர் ஆவதெல்லாம் அந்த வெற்றியை உறுதிப்படுத்தத் தேவையான கூடுதல் சமாசாரங்கள் தான் என்று தெரிவித்து இருக்கிறார்.

மோடி சொல்லி நடிப்பதாக கூறுவதா?
டெல்லி சொல்லியபடி நான் கறுப்பு சட்டை போட்டு நடிப்பதாக சிலர் கூறுகிறார்கள். இது உண்மை அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

மோடியை பற்றியோ, மத்திய அரசை பற்றியோ குறை சொல்லவில்லை என்று என் மீது சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி அதை உண்மையாக்க முயல்வது அயோக்கியத்தனம். அப்படித்தான் என் தாடையில் மோடியின் தாடியை ஒட்டும் முயற்சி நடக்கிறது என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். காந்தியை கூட பிரிட்டிசாரின் கூலி என்று சொன்னவர்கள் தானே இவர்கள். அதனால் இவர்களை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது.

மத்திய அரசு பற்றி சரி இல்லை என்று தான் நான் கரத்த சொல்லியிருக்கிறேன். மாட்டுக்கறி முதல் மதச்சார்ப்பு வரை மத்திய அரசை விமர்சித்திருக்கிறேன். ஆனால் இல்லவே இல்லை என்பார்கள் வசைபாடுவார்கள். பரவாயில்லை நான் கறுப்பு சட்டை போட்டதால் தான் 40 வருடங்கள் மக்களை அறிய இறைமறுப்பை சொல்லிக்கொண்டே வருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்து மதம் நாட்டை கெடுக்கும் அளவுக்கு மற்ற மதங்கள் கெடுப்பதில்லை என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*