Home » Flash News » சிங்க குட்டிக்கு முதல்வர் பெயர் சூட்டினார்

சிங்க குட்டிக்கு முதல்வர் பெயர் சூட்டினார்

சென்னை, அக்.12: சென்னை வண்டலூரில் புதிய வருகையான சிங்க குட்டிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பெயர் சூட்டினார்.

சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 2011-ம் ஆண்டு கவிதா என்ற பெண் சிங்கத்திற்கு பிறந்த பெண் சிங்க குட்டிக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஜான்சி என்ற பெயர் சூட்டினார்.

தற்போது ஜான்சி என்ற பெண் சிங்கம் ஆண் சிங்க குட்டியை ஈன்றெடுத்துள்ளது.
இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிரியல் பூங்காவுக்கு நேரில் சென்று அந்த சிங்க குட்டிக்கு விஷ்ணு என்று பெயர் சூட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின், ஜெயக்குமார், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மரகதம் குமரவேல் எம்.பி., காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூங்காவின் தெற்கு பகுதியில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உயர்நிலை உயிரின பாதுகாப்பு நிறுவனத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*