Home » முக்கிய செய்தி » அதிமுக 46-ம் ஆண்டு தொடக்க விழா

அதிமுக 46-ம் ஆண்டு தொடக்க விழா

சென்னை,அக் 12: அதிமுகவின் 46-வது ஆண்டு விழா வருகிற 17-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.மறைந்த அதிமுக நிறுவனர் எம்ஜிஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்த விழா நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைமை கழக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக எம்பி, எம்எல்ஏ, கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு
சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்.

17.10.2017 அன்று 46-ஆவது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 3 நாட்கள் அதிமுக கழக 46-வது ஆண்டு தொடக்க நாள் பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாநகராட்சிகள் மற்றும் நகரங்களிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுடெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*