Home » விளையாட்டு » பிஃபாவில் இருந்து பாகிஸ்தான் நீக்கம்

பிஃபாவில் இருந்து பாகிஸ்தான் நீக்கம்

சூரிச், அக். 12:  சர்வதேச கால்பந்து சங்கத்தில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டுள்ளதாக பிஃபா எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கால்பந்து சங்கத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கால்பந்து சங்கத்தின் கணக்கு சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அதன் நிர்வாகங்களை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அனுமதியில்லாமல் மூன்றாம் நபர் அணுக முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*