Home » விளையாட்டு » ஆசிய கோப்பை ஹாக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

டாக்கா, அக். 12:  ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் அணியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. டாக்கா நகரில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் இந்தியா ஜப்பான் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 3-வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் கோல் அடிக்க, பதிலடியாக ஜப்பான் வீரர் உடனடியாக கோல் அடிக்க ஆட்டம் சமமானது.

இதனையடுத்து, ஆட்டம் முழுவதும் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 22-வது நிமிடத்தில் லலித் உபாத்தியாவும், 33-வது நிமிடத்தில் ராமந்தீப் சிங்கும் கோல் அடிக்க இந்தியாவின் கை மேலோங்கியது. இதன் பின்னர் ஹர்மன்ப்ரீத் சிங் 35 மற்றும் 48 நிமிடத்தில் இரண்டு கோல் அடித்து அசத்தினார்.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியா வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*