Home » Flash News » பரோல் முடிந்து புறப்பட்டார் சசிகலா

பரோல் முடிந்து புறப்பட்டார் சசிகலா


சென்னை, அக்.12:  5 நாள் பரோல் முடிவடைந்து இன்று காலை 8.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட சசிகலா பகல் 12 மணி அளவில் பெங்களூரு சிறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். உடனடியாக அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக சசிகலா 5 நாள் பரோலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து கடந்த 6-ந்தேதி வெளியே வந்தார்.
5 நாள் பரோல் நேற்றுடன் முடிந்தது. இதனையடுத்து இன்று காலை 8.50 மணியளவில் அவர் தங்கியிருந்த தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மகள் இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

சசிகலா மீண்டும் சிறைக்கு செல்வதையடுத்து தி.நகர் இல்லத்தில் டிடிவி தினகரன், திவாகரன் உள்ளிட்டோருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.அதனை தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டார். அப்போது ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்து அவரை வழியனுப்பி வைத்தனர்.

தி.நகரில் இருந்து கிண்டி, போரூர் பூந்தமல்லி, ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக 12 மணி அளவில் பெங்களூரு சேர்ந்தார். அங்கு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். இதையடுத்து நடைமுறை சோதனைகளுக்கு பிறகு அவர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*