Home » இந்தியா » அமிதாப் பிறந்தநாள்: மோடி வாழ்த்து

அமிதாப் பிறந்தநாள்: மோடி வாழ்த்து

புதுடெல்லி, அக்.11:இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் 75-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் அமிதாப்பச்சன் சினிமா கலைஞர்களில் ஈடுஇணையற்றவர் என்பதில் நாம் பெருமை கொள்வோம் என்றும் அவர் நீண்டகாலம் உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தனது பிறந்த தினத்தை கொண்டாட விரும்பவில்லை என்பதால் அமிதாப்பச்சன் இன்று மும்பையில் இல்லை. அவர் குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அமிதாப்பச்சன் போலியோ, காசநோய் ஒழிப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு தூதுவராக இருந்து பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*