Home » Flash News » ‘மத்திய அரசு என்னை பழிவாங்க முயற்சி’: ப.சிதம்பரம்

‘மத்திய அரசு என்னை பழிவாங்க முயற்சி’: ப.சிதம்பரம்

புதுடெல்லி, அக்.10: மத்திய அரசு பழிவாங்குவதற்காகவே தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் வருமானவரித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் இன்று புதியதாக பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், மத்தியில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு என் மீது என் குடும்பத்தார் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு போடப்பட்டு வருகிறது. மேலும் வருமான வரித்துறையால் நடத்தப்படும் சோதனைகள் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று அதில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கண்காணிக்கப்பட்டு வரும் நபராக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்திற்கு செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என கார்த்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ப.சிதம்பரத்தின் இந்த பிரமாண பத்திரங்கள் தேசிய அரசியலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*