Home » இந்தியா » விண்ணில் பறக்கும் சின்ன வெங்காயம்

விண்ணில் பறக்கும் சின்ன வெங்காயம்

சென்னை, அக்.9: சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.100-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இந்த விலை தீபாவளி வரை குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் சின்னவெங்காயம் பயிரிடுவதும் குறைந்தது. இதனால், இதன் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூ.125 வரை விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இதன்பலனாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.40 ஆக சின்ன வெங்காயத்தின் விலை குறைந்தது.

இதனைத் தொடர்ந்து இறக்குமதி நிறுத்தப்பட்டதால், மீண்டும் அதன் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த சில நாட்களாக முதல்தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது.இதற்கு அடுத்த தர சின்ன வெங்காயம் ரூ.90, ரூ.80, ரூ.70 என்ற விலைகளில் விற்பனையாகி வருகிறது.

அதேவேளை கர்நாடகா, ஆந்திரா, மும்பையில் இருந்து பெல்லாரி வெங்காயம் வரத்து அதிகம் உள்ளது. இதன் காரணமாக இதன் விலை சராசரியாக கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. கடந்த மாதம் வரை பெல்லாரி கிலோரூ.18 முதல் ரூ.20 வரை விற்கப்பட்டது.

சின்னவெங்காயம் விலை உயர்வால் பெல்லாரி வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால், தீபாவளியை தொடர்ந்து மேலும் இருவாரங்களுக்கு இந்த விலையிலேயே விற்பனையாக வாய்ப்புள்ளது என மொத்த வியாபாரிகள் தெரிவித்து
உள்ளனர். எனவே சின்ன வெங்காயத்தின் விலையை குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*