Home » சென்னை » மாணவர்கள் தங்களை மேம்படுத்திட வேண்டும்

மாணவர்கள் தங்களை மேம்படுத்திட வேண்டும்

சென்னை, அக்.9: மாறிவருமி தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மலேசிய அரசின் தலைமைச் செயலர் அலி அம்சா வலியுறுத்தி யுள்ளார்.

வண்டலூர் பி.எஸ். அப்துர்ரகுமான் கிரசென்ட் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் 1105 பேருக்கு பட்டங்கள் வழங்கி அவர் பேசியது:

சர்வதேச அளவில் கணினி, கைபேசி, வலைதளம், தகவல் தொழில்நுட்பம் மூலம் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க வளர்ச்சி, அனைத்துத் துறைகளிலும் கணிக்க இயலாத, கற்பனைக்கெட்டாத மாற்றங்களை உருவாக்கி வருகின்றது.

உலக அளவிலான தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னேற்றத்திற்கேற்ப மேம்படுத்திக் கொள்ளவில்லை என்றால் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு நோக்கியா கைபேசி நிறுவனம் உதாரணம். அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்ட முதலீடு 72 சதவீதம் அதிகரித்துள்ளது.

மின் சக்தி உற்பத்தித் துறையில் தனியார் முதலீடு மூன்றில் இரண்டு பங்காக அதிகரித்துள்ளது.
சேவை நோக்குடன் செயல்படும் அரசும், லாப நோக்குடன் செயல்படும் தனியாரும் ஒருங்கிணைந்து மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்க முடிகிறது.

மலேசியாவில் அனைத்து ஆவணங்களும் ஒற்றைச் சாளர முறையில் சரிபார்க்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில் புதிய பாஸ்போர்ட் பெற முடியும் என்றார்.

இந்த விழாவில் அலி அம்சாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகக் குழுத் தலைவர் அப்துர் காதிர் ஏ.ரகுமான் புகாரி, துணை வேந்தர் சாகுல் ஹமீது பின்அபுபக்கர், பதிவாளர் வி.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*