Home » Flash News » சசிகலா பற்றி அமைச்சர் பரபரப்பு பேச்சு

சசிகலா பற்றி அமைச்சர் பரபரப்பு பேச்சு

மதுரை,அக்.8:இப்போதைய சூழ்நிலையில் சசிகலா பற்றி எந்த கருத்தும் சொல்ல முடியாமல் அனைத்தையும் அடக்கிக்கொண்டுள்ளேன் என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் டெங்கு காய்சலை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்த பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: புயல் போல் வேகமாக டெங்கு பரவி வருகிறது. அதனை சுனாமி போல் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. டெங்குவை விட மோசமானது தி.மு.க தான். 5 முறை ஆட்சியில் இருந்த மக்களுக்காக திமுக ஒன்றும் செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு திமுக தான் காரணம். மத்தியில் ஆட்சி இருந்த காலத்தில் தங்கள் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு திமுக ஆட்சி நடத்தியது. திமுக ஆட்சி காலத்தில் தான் தீவீரவாதம் தலை தூக்கி இருந்தது.

அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா, அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கருத்து வேறுபாடுகள், வருத்தங்கள் இருந்தாலும், தற்போது வெளிப்படுத்த முடியாமல் அனைத்தையும் அடக்கி கொண்டுள்ளேன். இன்றைய சூழலில் சசிகலா குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாமல் இருக்கிறேன்.
இதனை மாற்றி கொள்ள மாட்டேன். அமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பதால் ஆட்சி தொடர விருப்பு வெறுப்புக்கு கட்டுப்படுகிறேன். நான் சொல்லும் கருத்துக்கள் முதல்வர், துணை முதல்வர் எடுக்கும் முடிவுக்கு பாதகமாக இருக்கக்கூடாது.டெங்குவை விட திமுக மோசமானது. இவ்வாறு கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*