Home » Flash News » அரசியலுக்காகவே சசிகலா வந்துள்ளார்: ஜெ.தீபா பரபரப்பு பேட்டி

அரசியலுக்காகவே சசிகலா வந்துள்ளார்: ஜெ.தீபா பரபரப்பு பேட்டி

சென்னை, அக்.7: சசிகலா கணவர் மீதான பாசத்தால் பரோலில் வரவில்லை என்றும் அரசியலில் காய் நகர்த்தவே சென்னை வந்துள்ளார் என்றும் எம்ஜிஆர் அம்மா பேரவைத் தலைவர் ஜெ.தீபா கூறியுள்ளார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கணவர் நடராஜனை பார்ப்பதற்காக 5 நாள் பரோலில் சசிகலா வந்துள்ளார். இதுகுறித்து ஜெ.தீபா தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
சசிகலா பரோலில் வந்து இருப்பதற்கு கணவர் மீதுள்ள பாசமே காரணம் என்று கூறமுடியாது. அவர்களிடையே அப்படிபட்ட உறவு எதுவும் இருந்ததாக தெரியவில்லை. அவர் அரசியலுக்காகவே பரோலில் வந்திருப்பதாக நான் கருதுகிறேன். இந்த 5 நாளில் அவர் அரசியலில் காய் நகர்த்துவார். இதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன என்றார்.

மேலும், ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் இல்லம் தனிப்பட்ட சொத்து என்பதால் அதை நினைவு இல்லமாக மாற்ற முடியாது என்றும், அந்த சொத்துக்கு நானும் எனது சகோதரர் தீபக்கும் தான் வாரிசு என்றும் தீபா கூறினார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தீபா வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அஃபிடவிட்டில் தனது பாட்டி வேதவள்ளி என்ற சந்தியா சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பல்வேறு சொத்துக்களை வாங்கினார். 1971ல் அவர் மரணடைந்துவிட்டார். எனது தந்தை ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் மட்டுமே அவரது வாரிசாக இருந்தனர்.
தற்போது எனது தந்தையும் அத்தை ஜெயலலிதாவும் மரணமடைந்துவிட்ட நிலையில் நாங்கள் தான் அந்த சொத்துக்கு வாரிசு என்று தீபா அஃபிடவிட்டில் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*