Home » Flash News » ‘சசியை ஒதுக்கி வைத்த முடிவில் மாற்றமில்லை’

‘சசியை ஒதுக்கி வைத்த முடிவில் மாற்றமில்லை’

சென்னை, அக்.6:அதிமுகவில் இருந்து சசிகலாவை ஒதுக்கி வைத்த முடிவில் மாற்றமில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ளார் சசிகலா. சமீபத்தில் முதல்வர் எடப்படாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை ஒதுக்கி வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கூறுகையில், இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி 2-வது ஆய்வுக்கூட்டத்தில் பொருட்கள் மீதான வரிகுறைப்பு குறித்து ஆலோசிக்கப்படும். திரைத்துறையினர் தொடர்பான பிரச்னையும் முன்வைக்கப்படும்.

சசிகலாவை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்தது அனைவரது ஒருமித்த முடிவு, இதில் மாற்றம் இருக்காது. ஸ்டாலின், பதவி மோகத்தில், அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*