Home » சினிமா » ஹர ஹர மகாதேவகி- விமர்சனம்

ஹர ஹர மகாதேவகி- விமர்சனம்

கைமாற்றப்படும் பைகளும் அதனால் ஏற்படும் குழப்பங்களும் அதற்கு நடுவே சேர்க்கப்பட்டுள்ள இரட்டை பொருள் வசனங்களும் தான் ஹர ஹர மகாதேவகி படம்.  ஹரி(கவுதம் கார்த்திக்), ரம்யா(நிக்கி கல்ரானி) காதலர்கள். இருவருக்கும் இடையில் ஏற்படும் மனகசப்பு காரணமாக பிரேக் அப் செய்ய முடிவு செய்கிறார்கள். அப்போது அவர்கள் காதலித்த போது தங்களுக்குள் கொடுத்துக்கொண்ட பரிசுப்பொருட்களை திருப்பி கொடுத்துவிட முடிவுசெய்கிறார்கள்.
இதற்கிடையே 1 கோடி கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்ற முயற்சி செய்கிறார் ரவி(பால
சரவணன்). அரசியல்வாதிக்காக கூட்டத்தில் குண்டு வைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் ஸ்பைக்(மொட்டை ராஜேந்திரன்) மற்றும் குமாரு (கருணாகரன்).

இவர்கள் கையில் வைத்திருக்கும் பைகள் சில சம்பவங்களில் கைமாறுகிறது. அனைவரும் ஒரே டிசைன் பையை வைத்துக்கொண்டு இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது. முடிவில் ஹரி-ரம்யா பிரிந்தார்களா? கள்ள நோட்டுகள் மாற்றப்பட்டதா? குண்டு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை .  கவுதம் கார்த்திக்கிற்கு இது மேலும் ஒரு படம் என்பதை தவிர வேறு எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. அவருடைய கதாபாத்திரத்தில் பொருந்துகின்றார். நிக்கி கல்ரானி அழகாக இருக்கிறார். ஆங்காங்கே சில ரியாக்ஷன் காட்டி ஸ்கோர் செய்கிறார்.

படத்தில் மொட்டை ராஜேந்திரன் வரும் சீன்களுக்கு எல்லாம் தியேட்டர் தன்னை மீறி அதிர்கிறது. படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட அடல்ட் காமெடி என்பது முன்னரே தெரிந்துவிட்டது. படம் முழுக்க பால சரவணன், ரவி மரியம், கருணாகரன், சதீஷ் என அத்தனை நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள்.
சிறந்த அடல்ட் காமெடி படமாக இப்படம் இருந்திருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து சிரிப்பலைகள் ஏற்படுத்த திரைக்கதை தவறி விட்டது. ஆங்காங்கே சிரிக்க வைக்கும் சில காட்சிகளும் மனதில் நிற்கவில்லை. ஆனால் தியேட்டரில் இருக்கும் வரை கதாபாத்திரங்களை போல குழம்பி லாஜிக் பார்க்காமல் என்ஜாய் பண்ணலாம்.
—-ஹர ஹர மகாதேவகி- சிரிக்க மட்டும்

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*