Home » Flash News » பிக்பாஸ் பட்டத்தை வெல்லபோவது யார்?

பிக்பாஸ் பட்டத்தை வெல்லபோவது யார்?

பிக்பாஸ் போட்டியில் இன்று ஓருவர் வெளியாக இருக்கும் நிலையில் மீதமிருக்கும் 4 பேரில் பட்டத்தை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.  நேற்றைய நிகழ்ச்சியில் வழக்கம் போல சுவாரஸ்யம் இல்லா டாஸ்குகளே கொடுக்கப்பட்டது. பிக்பாசிற்கு இந்த வீட்டில் எப்படி சுவாரஸ்யத்தை உண்டாக்குவது என்று தெரியவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
தற்போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் எவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்தினாலும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பது போல பாசமழையை பொழிந்து கொண்டே இருக்கிறார்கள். எப்போதும் சண்டையும் சர்ச்சையுமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு தான் என்றாலும். அதானே பிக்பாஸ் வீட்டின் ஹிஸ்டரி.

எப்போதும் பாசப்பாடல் ஓலித்துக்கொண்டு இருக்கும் பிக்பாஸ் வீட்டில் டாஸ்குகளாவது ஏதாவது புதுமையாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லை. மீண்டும் அந்த வைரம் திருடும் டாஸ்க். இத்துடன் மூன்றாவது முறையாக இந்த டாஸ்க் கொடுக்கப்படுகிறது. முதல் முறை இந்த டாஸ்க்கை கொடுக்கும் போது பிக்பாஸ் வீட்டில் ஓவியா இருந்தார். மற்றவர்களை கடுப்பாக்கவே அடிக்கடி வைரத்தின் அருகே வந்து நின்று ஜாலிக்காட்டினார். பிக்பாஸ் வீட்டின் கனா காலம் அது… ம்ம். இப்போது அந்த வேலையை சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிந்து நமக்கேன் பிரச்சனை என்பது போன்று தூங்கிவிட்டார். அனைவரும் தூங்கும் போது முதலில் தேவையில்லாமல் தூங்கிய ஆரவ். என்னடா.. டாஸ்க் கொடுத்தா இப்படி தூங்குறீங்க என்பது போல பார்த்து விட்டு மீண்டும் தூங்கிவிட்டார்.

அடுத்ததாக எழுந்த ஹரிஷ் சாமர்த்தியமாக வைரத்தை எடுத்துக்கொண்டு உறங்கினார். அடுத்த நாள் வைரம் திருடப்பட்டதற்கான அலாரம் அடித்தது. ஹரிஷýம் மற்றவர்கள் போல ஆச்சர்யமாக எழுந்தார். இதுவே எங்க சக்தியா இருந்திருந்தா விளையாட்டு திருடினத கூட சீரியாசாக எடுத்துட்டு அழுது டிஆர்பி கூட்டி இருப்பார் என்று தோன்றியது. ஹரிஷ் பிரோ..திருடுறது தப்புனு தெரியாது.. இப்போ நீங்க அழனும்.. என்பது போல இருந்தது அந்த சீனை பார்க்கும்போது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று ஒருவர் வெளியேற இருக்கிறார். பிக்பாஸின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக 100 நாட்கள் கணக்கில் இருக்கிறது சினேகன், ஆரவ், கணேஷ் மட்டுமே என்பதால் அவர்களில் ஒருவர் தான் வெல்ல வேண்டும் என்பது நியாயம். ஆனால் பிக்பாஸின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*