Home » குற்றம் » ரூ.1 லட்சம் திருட்டு: ஒருவர் கைது

ரூ.1 லட்சம் திருட்டு: ஒருவர் கைது

சென்னை, ஜூன் 18: சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் குணா(வயது 33). துணிக்கடை வைத்திருக்கிறார்.

இவர் தனது நண்பர்களுடன் நேற்று காரில் வடபழனிக்கு சென்றுள்ளார். அப்போது காரில் ரூ. 1 லட்சம் எடுத்துச் சென்றுள்ளார். 100 அடி சாலையில் இருக்கும் டீக்கடை ஒன்றின் முன் காரை நிறுத்தி விட்டு இருவரும் டீ குடிக்க சென்றுள்ளனர்.

இருவரும் உள்ளே சென்றதை பார்த்த இரண்டு மர்ம ஆசாமிகள் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.  இதைக்கண்டு அதிர்ச்சியைடந்து குணா உடனே கூச்சலிட்டுள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தப்பிச்சென்ற இருவரையும் துரத்தி உள்ளனர். அதில்ஒருவர் ஓடிவிட்டார். மற்றொருவரை பொதுமக்கள் பிடித்துவிட்டனர்.

இதனையடுத்து பிடிப்பட்டவரை போலீசில் ஒப்படைத்து இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த வடபழனி போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.  அந்த விசாரணையில் அந்த நபர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அசோக் (வயது 34) என்பது தெரியவந்துள்ளது.
மேலும் தப்பிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.

குணா காரில் பணம் எடுத்து வந்தது அவர்களுக்கு எப்படி தெரியும், குணாவை பின்தொடர்ந்து வந்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*