Home » அரசியல் » அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது: தம்பிதுரை பேட்டி

அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது: தம்பிதுரை பேட்டி

சென்னை, ஜூன் 18: அதிமுக ஆட்சியை ஒரு போதும் கவிழ்க்க முடியாது என்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்த பின் மக்களைவை துணை சாபநாயகர் தம்பித்துரை தெரிவித்தார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து அதிமுக எம்எல்ஏவுக்கு பணப்பட்டு வாடா செய்ய முன்வந்ததற்கான ஆதாரத்தை தாக்கல் செய்தார்.
இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னரை காலை 11 மணிக்கு சந்தித்தார். இந்த சந்திப்பு  30 நிமிடங்கள் நடந்தது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கவர்னரை நட்பு ரீதியாக சந்தித்தேன் அரசியல் நிலவரம் குறித்து எதுவும் பேசவில்லை. தனியார் தொலைக்காட்சியில் வந்த பண பேரம் விவகாரம் பொய்யானது. அது நானில்லை என்று எம்எல்ஏ சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார். கட்சி தாவல்  சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு எம்எல்ஏக்களுக்கும் லஞ்சம் கொடுக்க முடியாது. அந்தளவுக்கு மாற்றம் வந்துள்ளது. அது போல எவரும் வாங்கவும் மாட்டார்கள். குதிரை பேரம் நடந்து உள்ளதாக ஸ்டாலின் சொல்வது சரியல்ல. அதிமுக எந்த குதிரையிலும் ஏறவில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆட்சியை கலைத்து விட்டு  விரைவில் முதல்வர் ஆகிவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் அது ஒருபோதும் நடக்காது. ஆட்சி முழுமையாக 4 ஆண்டுகளை நடைபெறும். அந்த காலத்தில் இருந்தே ஆட்சியை கலைப்பது தான் திமுகவின் வேலை. அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக உள்ளனர். ஆட்சி கவிழ ஒரு போதும் விடமாட்டார்கள் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர்,  3 அணிகளாக அதிமுக செயல்படுவது உண்மையா என்றார், இதற்கு அவர் பதில் கூறுகையில் அப்படி ஒன்றுமில்லை ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்றார். அப்போது மற்றொரு நிருபர்.ஒ.பன்னிர்செல்வம் அணிகள் இணைப்புக்கு அமைத்த குழுவை கலைத்துவிட்டார் இந்த நிலையில் எப்படி ஒற்றமையாக இருப்பதாக சொல்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறுகையில் , அவர்கள் வந்தால் இணைத்துக் கொள்வோம். தற்போதைய எடப்பாடி அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மானியக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. புகார்களுக்கு உடனுக்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். பண பேர விவகாரத்தை அதிமுக அரசு எதிர்கொள்ள தயாராக உள்ளதா? என்ற வேறு ஒரு நிருபரின் கேள்விக்கு, அவர் பதில் கூறுகையில் அப்படி எதுவுமே நடக்கவில்லை ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தான் செயல்படுகிறது என்றார் அதனையடுத்து, அதிமுகவின் தலைமை யார் கையில் உள்ளது என்ற  நிருபரின் கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில், சசிகலாவைத்தான் நாங்கள் தேர்வு செய்தோம். அவர் சிறை சென்றதால் டிடிவி கட்சியை கவனித்துக் கொண்டார் . தற்போது எடப்பாடி திறமையாக செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*