Home » Flash News » படகு கவிழ்ந்து விபத்து – 18 பேர் உயிரிழப்பு

படகு கவிழ்ந்து விபத்து – 18 பேர் உயிரிழப்பு

லக்னோ, செப்.14:உத்திரபிரதேசம் மாநிலம் பக்பத் பகுதியில் யமுனா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 18 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் பக்பத் பகுதியில் யமுனா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 24 பேருடன் யமுனை நதியில் பயணித்த படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும், மீட்பு நடவடிக்கை தொடங்கி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

யமுனை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்ட உடல்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*