Home » Flash News » பள்ளியில் தீ: 25 மாணவர்கள் பலி

பள்ளியில் தீ: 25 மாணவர்கள் பலி

கோலாலம்பூர், செப்.14:கோலாலம்பூரில் பள்ளி ஒன்றில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத பள்ளியில், அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் ஜாலன் தாடக் கேராமத் என்ற பகுதியில் தாருல் குரான் இட்டிபாகியா என்ற பெயரில் மத வழிபாட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் அப்பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*