Home » Flash News » சிலை கடத்தல்: டிஎஸ்பி காதர் பாஷா கைது

சிலை கடத்தல்: டிஎஸ்பி காதர் பாஷா கைது

சென்னை, செப்.14: சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த போலீஸ் டிஎஸ்பி காதர்பாஷா கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டார்.

பொருளாதார குற்றப்பிரிவு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் காதர் பாஷா. அங்கு போலீஸ்காரராக பணியாற்றியவர் சுப்புராஜ். கடந்த 2008ம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே தனியார் நிலத்தில் புதைந்திருந்த 2 ஐம்பொன் சிலைகளை அந்த நிலத்தின் உரிமையாளரிடமிருந்து மிரட்டி அதனை வாங்கி சிலை கடத்தல் மன்னன் தீன தயாளனிடம் ரூ.25 லட்சத்துக்கு விற்று மோசடி செய்ததாக, சிலை தடுத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட தீனதயாளன் அளித்த வாக்குமூலம் தெரியவந்தது.

இதை தொடர்பாக ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தினர். இதையடுத்து கோயம்பேட்டில் சப்-இன்ஸ்டராக பணியாற்றிய சுப்புராஜை கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த டிஜிபி காதர் பாஷாவை பிடிக்க சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் கும்பகோணத்தில் பதுங்கியிருந்த டிஎஸ்பி காதர் பாஷா நேற்றிரவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*