Home » சினிமா » யார் இந்த ப்யூட்டி?

யார் இந்த ப்யூட்டி?

யார் இந்த புதிய முகம்? ரோஜா சாயலாக இருக்கிறதா? இல்லை ஹேமாமாலினி போன்ற தோற்றமா? இவர்கள் யாரும் இல்லை. தமிழ் திரைப்பட உலகத்தில் தனிக்கென தனி பாணி அமைத்து வெற்றி நடைபோட்டு வரும் விஜய் சேதுபதியின் புதிய அவதாரம் தான் இது.

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இரண்டாவதாக இயக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். விஜய்
சேதுபதி, சமந்தா, பகத் பாசில் என பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். மேலும், இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கினும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

முன்னதாக இந்தப் படத்தின் பெயர் அநீதி கதைகள் என பெயரிடப்பட்டு தற்போது சூப்பர் டீலக்ஸ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ்ஷா மற்றும் வினோத் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

இந்தப் படத்துக்கான திரைக்கதையை தியாகராஜா குமாரராஜனுடன் சேர்ந்து நலன் குமாரசாமி மற்றும் மிஷ்கின் எழுதியிருக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கெட்டப் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை அப்படத்தின் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற பெண் வேடத்தில் நடிக்கிறார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*