Home » Flash News » ‘காலா’ படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது

‘காலா’ படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது

சென்னை, செப்.13:தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. இதனால் இன்று முதல் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் துவங்கியுள்ளன.

ரஜினிகாந்த் நடித்துவரும் காலா படத்தின் சூட்டிங்கும் இன்று மீண்டும் தொடங்கியது. படபிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளது.சம்பள பிரச்சனை காரணமாக கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பெப்ஸி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து படபிடிப்புகள் பாதிக்கப்பட்டது.

பின்னர் ரஜினியின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் படபிடிப்புகளில் பெப்ஸி ஊழியர்களை தவிர வெளியாட்களை நியமிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது.

இதை எதிர்த்து பெப்ஸி மிண்டும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் போராட்டத்தில் இறங்கியது. இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து 3 கட்டமாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. நேற்று மாலை நடைபெற்ற பேச்சு வார்த்தையை அடுத்து இரவு 12.30 மணியளவில் இருதரப்புக்கும் இடையே சமரச முடிவு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்ஸி) தலைவர் ஆர்.கே. செல்வமணி இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனையடுத்தது போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இன்று காலை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் வழக்கம் போல் தொடங்கின. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா படத்தின் படபிடிப்பும் மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்கள் படபிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*