Home » தமிழ்நாடு » காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு: வெள்ள அபாயம்

காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு: வெள்ள அபாயம்

சேலம், செப்.13: புஷ்கர விழாவிற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுவதால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்வதால், துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று தொடங்கிய விழா வருகிற 23-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி, மேட்டூர் அணையில் இருந்து, நேற்று இரவு 10 மணி அளவில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக காவிரிக் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றுப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16, 441 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 76.69 அடியையும் எட்டியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*