Home » Flash News » கார் மீது லாரி மோதல் :10 பேர் பலி

கார் மீது லாரி மோதல் :10 பேர் பலி

பெங்களூர், செப்.13: கர்நாடகாவைச் சேர்ந்த யெல்லாபூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் 10 பேர் மங்களூரு அருகே உள்ள குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர்.

தரிசனம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர்களின் கார் உத்தரகன்னட மாவட்டம் எல்லாபூர் தாலுகாவில் உள்ள அரபைலு கிராமம் அருகே வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த கோரவிபத்தில் காரின் முன்புறம் முற்றிலும் நசுங்கி உள்ளே இருந்த 3 குழந்தைகள், 3 பெண்கள், 4 ஆண்கள் என அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*