Home » குற்றம் » வாலிபரிடம் பணம், செல்போன் பறிப்பு

வாலிபரிடம் பணம், செல்போன் பறிப்பு

சென்னை, செப்.13: வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே பைக்கில் சென்று கொண்டு இருந்த வாலிபரை மிரட்டி ரூ. 3 ஆயிரம் மற்றும் செல்போன் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்(வயது 19). இவர் நேற்று சீட்டு பணம் ரூ. 3 ஆயிரத்தை எடுத்து கொண்டு பைக்கில் சென்றுள்ளனர்.

அவர் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்த போது 2 மர்ம நபர்கள் அவரை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த விலைமதிப்பான செல்போன் மற்றும் ரூ. 3 ஆயிரத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*