Home » Flash News » இந்த மாத இறுதிக்குள் கமல் தனிக்கட்சி?

இந்த மாத இறுதிக்குள் கமல் தனிக்கட்சி?

சென்னை, செப்.13: இந்த மாத இறுதிக்குள் நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் நிலவுவதாக கூறிய கமல்ஹாசன், தமிழக அரசில் ஊழல் அதிகரித்து விட்டதாக கூறி பரப்பபை ஏற்படுத்தினார். மேலும் தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டதாகவும் கூறியதுடன் தினமும் டுவிட்டர் மூலம் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அரசியல் கட்சியை தொடங்கும் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். விஜயதசமி நாளில் அதற்கான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. தனது முடிவு குறித்து இன்னும் நற்பணி மன்ற தலைவர்களுக்கு கமல் எதையும் தெரிவிக்கவில்லை.

கமலுக்கு நெருக்கமான மேலும் ஒருவர் கூறுகையில், ‘இப்போதுதான் கமல் அரசியலில் களமிறங்க ஏற்ற காலம். திமுகவோ ஆளும் கட்சியோ பெரிய கூட்டணியை அமைக்கும் முன்பாக அரசியல் கட்சியை ஆரம்பிப்பது எதிர்காலத்திற்கு நல்லது என கமல் நினைக்கிறார்’ என்று அவர் கூறியுள்ளார்.

நவம்பரில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் போட்டியிடுவதற்கு ஏற்ப, இம்மாத இறுதிக்குள் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை கமல் வெளியிடக் கூடும் என்கிறார்கள். சுமார் 4000 வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் உள்ளாட்சி தேர்தலின் மூலம், அடிமட்ட அளவுக்கு கட்சியை கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்படும் என்பது கமல் கணக்கு.நற்பணி மன்றத்தில் கட்டுக்கோப்பான நிர்வாகிகள் உள்ளனர். எனவே உள்ளாட்சி தேர்தலில் இவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கமல் நம்புகிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*