Home » Flash News » மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை, செப்.13: நீட்தேர்வை எதிர்த்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் இறுதி கட்டப்போராட்டத்தை விரைவில் நடத்துவோம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வை எதிர்த்து திமுக மற்றும் எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தை தொடர்ந்து இன்று மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாம்பரம் பேருந்து நிலையம் அருகே இன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். மேடையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும். அதுவே இறுதி போராட்டமாகவும், ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் போராட்டமாகவும் அமையும் என்றார்.

மாணவி அனிதா தற்கொலை செய்யவில்லை என்றும், அவரை மத்திய, மாநில அரசுகள் கொலை செய்து விட்டன என்றும் கூறிய அவர், இதற்கான தண்டனையை இந்த அரசுகள் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*