Home » சினிமா » ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

படத்தில் கௌதம் ஜோடியாக ஓவியாநடிகர் கௌதம் கார்த்திக் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்துக்கு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்க உள்ளார்.
கௌதம் கார்த்திக் , நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹர ஹர மகாதேவகி’ ப்ளூ கோஸ்ட் புரொடக்ஷன்ஸ், தங்கம் சினிமாஸ் தங்க ராஜ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கௌதம் கார்த்திக் பேசியதாவது:-
இயக்குநர் என்னிடம் ஹரஹர மகாதேவகியின் கதையை கூறினார். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் நான் சந்தோஷமாக என்ஜாய் செய்து நடித்தேன். அனைவரும் கடினமாக உழைத்தோம். ஆனால் செட்டில் எல்லோரும் சிரித்துக்கொண்டே வேலைசெய்தது அருமையாக இருந்தது என்றார்.

தயாரிப்பாளர் சங்க கௌரவ செயலாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், கௌதம் கார்த்திக்கை வைத்து எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. அந்த படத்தை ‘ஹரஹர மகாதேவகி’ இயக்குநர் சந்தோஷ் தான் இயக்குகிறார் என்றார். இதை தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கவுள்ள அப்படத்தின் டைட்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என இயக்குநர் சந்தோஷ் அறிவித்தார்.

​விழாவில் நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் சங்க கௌரவ செயலாளர் கதிரேசன் , 2டி என்டர்டெயின்மெண்ட் ராஜ சேகர் பாண்டியன், தயாரிப்பாளர் தங்கராஜ், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயகுமார், ஒளிப்பதிவாளர் செல்வகுமார், இசையமைப்பாளர் பால முரளி பாலு, நடிகர்கள் ரவிமரியா, சதீஷ், மயில்சாமி, ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., அருள்பதி, ஆரா சினிமாஸ் மகேஷ் , இயக்குநர் ஆர்.கண்ணன், கௌரவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*