Home » விளையாட்டு » 38 ஹாட்ரிக் கோல்கள்: மெர்சல் மெஸ்சி

38 ஹாட்ரிக் கோல்கள்: மெர்சல் மெஸ்சி

சென்னை, செப். 12: லா லிகாவில் எஸ்பான்யல் அணிக்கெதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்ததன் மூலம் பார்சிலோனாவிற்கு மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

லா லிகா தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா – எஸ்பான்யல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே பார்சிலோனா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

குறிப்பாக நட்சத்திர வீரர் மெஸ்சி அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் 26, 35 மற்றும் 67வது நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடித்தார். இதன்மூலம் பார்சிலோனா அணிக்காக அவர் 38 முறை ஹாட்ரிக் கோல்கள் அடித்துள்ளார். இதில் யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக் தொடரில் 7 முறை அடித்த ஹாட்ரிக் கோல்களும் அடங்கும்.

87-வது நிமிடத்தில் சக வீரர் பிக்காய் ஒரு கோலும், 90-வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோலும் அடிக்க பார்சிலோனா 5-0 என அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது பார்சிலோனா.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*