Home » அரசியல் » நதிகள் இணைப்பு குறித்து ரஜினி வாய்ஸ்

நதிகள் இணைப்பு குறித்து ரஜினி வாய்ஸ்

சென்னை, செப்.11:நதிகள் இணைப்பு குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோ பதிவு டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

நதிகளை இணைப்போம், பாரதம் காப்போம்இயக்கத்தின் சார்பில் இந்தியா முழுவதும் நதிகள் இணைப்புக்கான விழிப்புணர்வு கூட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நதிகள் இணைப்பை வலியுறுத்தி நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ரத்த நாளங்கள் இல்லையென்றால் உடம்பு இயங்காது. நதிகள் பூமியின் ரத்த நாளங்கள். அதை பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஜீவ நதிகளாக்க மதிப்புக்குரிய சத்குரு எடுக்கும் இந்த மாபெரும் முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

முந்தைய வாஜ்பாய் தலைமையிலான பிஜேபி ஆட்சியின் போது காவிரி பிரச்சனைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ரஜினி நதிகளை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் தான் தனது சொந்த பணத்திலிருந்து ரூ.1 கோடி தருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*