w
Home » Category >விளையாட்டு (Page 75)

பந்து வீச்சு அபாரம்; விராட் கோலியின் சாதனை 28-வது ஒருநாள் சதம்: தொடரை வென்றது இந்தியா

4-வது ஒருநாள் போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த பிறகே எதிர்பார்ப்பிற்கு இணங்க 5-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நொறுக்கியது இந்திய அணி. கிங்ஸ்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய மே.இ.தீவுகள் பேட்டிங் மீண்டும் ஒருமுறை பல்லிளித்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களையே எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி விராட்...
மேலும்

டேபிள் டென்னிஸ்: இந்தியாவிற்கு வெண்கலம்

மெல்போர்ன், ஜூலை 6: ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கத்தை தட்டி சென்றனர். ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் அரைஇறுதியில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி-பூஜா ஜோடி 4-11, 6-11, 2-11 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் மெங்-சு யுலிங் ஜோடியிடம் தோல்வி கண்டது. இதனால் இந்திய ஜோடி...
மேலும்

கடைசி ஒருநாள் போட்டி; தொடரை வெல்லுமா இந்தியா

கிங்ஸ்டன், ஜூலை 6: வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கிங்ஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகள் மோதும் 121வது ஒரு நாள் போட்டி இதுவாகும். வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து...
மேலும்

15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் கிறிஸ் கெயில்

கிங்ஸ்டன், ஜூலை 6: இந்திய அணிக்கெதிரான டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 15 மாதங்களுக்கு பிறகு சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடந்துவரும் நிலையில், சபீனா பார்க் மைதானத்தில் வரும் 9ம் தேதி நடைபெறும் டி20 போட்டிக்கான 13...
மேலும்

மெஸ்ஸியின் ஒப்பந்தம் நீடிப்பு

ரொசாரியோ, ஜூலை 6: 2021 ம் ஆண்டு வரை பார்சிலோனா கிளப் அணிக்காக மெஸ்ஸி விளையாட உள்ளார். அர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி. இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முன்னணி கிளப்பான பார்சிலோனாவில் தனது 13 வயதில் இணைந்தார். அது முதல் அவர் அந்த கிளப் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக விளங்கும் மெஸ்சியின் நடப்பு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு...
மேலும்

புதிய பயிற்சியாளர் நியமனம்: வீரர்களிடம் கருத்து கேட்கும் பிசிசிஐ

கிங்ஸ்டன், ஜூலை 6: புதிய பயிற்சியாளர் குறித்து வீரர்களின் கருத்தை அறிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளார். இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் வரும் 10ல் நடைபெற உள்ள நிலையில், கேப்டன் விராத் கோலி உள்ளிட்ட வீரர்களை ராகுல் ஜோரி கிங்ஸ்டனில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி, வீரேந்திர சேவாக்,...
மேலும்

மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி நான்காவது வெற்றி

ஜூலை 6, மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது. இங்கிலாந்தின் டெர்பி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனைகளான பூனம் ராவத் 16, ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்....
மேலும்

ஜெயசூர்யாவின் பதிவிகாலம் நீடிப்பு

சென்னை, ஜூலை 5: இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவரான முன்னாள் வீரர் ஜெயசூர்யா மேலும் 6 மாதங்கள் பதவி வகிப்பார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜெயசூர்யா தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பதவிக்காலம் இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் சமீபத்திய செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், புதிய தேர்வுக்குழு அமைக்கப்படும் என்று அந்நாட்டு விளையாட்டுத் துறை...
மேலும்

இறப்பதற்குள் பேரனை பார்க்க வேண்டும்: பும்ராவின் தாத்தா

ஜூலை 5: நான் இறப்பதற்குள் என் பேரனை நேரில் பார்க்க வேண்டும் என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் தாத்தா. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர், பும்ரா. இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர். சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது, நோ-பால் போட்டு ஏமாற்றியதன் மூலம் பும்ரா பிரபலமாகி இருக்கிறார் இப்போது. இவரது தாத்தா சண்டோக் சிங், உத்தரகண்டில் வசிக்கிறார். தனது பேரனை...
மேலும்

அறிமுக போட்டியில் ஹாட்ரிக் எடுத்த இலங்கை வீரர்

கொலும்பு, ஜூலை 5: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கையின் வணிது ஹசரங்கா, அறிமுகப் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். இலங்கை வந்துள்ள ஜிம்பாப்வே அணி 5 ஒருநாள், ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க வந்துள்ளது. நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இலங்கை...
மேலும்

3 வித போட்டிகளுக்கு கேப்டனாகிறார் சர்ஃப்ராஸ் அகமது

சென்னை, ஜூலை 5: பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அனைத்து ரக போட்டிகளுக்கும் கேப்டனாக சர்ஃப்ராஸ் அகமது நியமிக்கப்பட்டார். சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 2016 டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் கேப்டன் பதவியை அஃப்ரிடி துறந்தார். அதன்பின்னர் டி20...
மேலும்