Home » Category >விளையாட்டு (Page 60)

நடப்பவற்றை எதிர்பார்க்கவே இல்லை: அஷ்வின்

காலே, ஜூலை 30: 50 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த நிலைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கெதிராக காலேவில் நடந்த டெஸ்ட் போட்டி, இந்திய விரர் அஸ்வின் பங்கேற்கும் 50வது டெஸ்ட் போட்டியாகும். இதையடுத்து அவருக்கு பிசிசிஐ தரப்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில்...
மேலும்

கோலி சதம்: இலங்கைக்கு 550 ரன் இலக்கு

கொழும்பு, ஜூலை 29: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இன்று சதமடித்தார். இது டெஸ்ட்டில் அவருக்கு 17-வது சதமாகும். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 600 ரன்களை குவித்தது. மூன்றாம் நாளான...
மேலும்

செக் மோசடி: கிரிக்கெட் வீரருக்கு சம்மன்

டெல்லி, ஜூலை 28: செக் மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முன்னாப்பட்டேலுக்கு டெல்லி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் முன்னா பட்டேல். 2011-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடிவர். இப்போது நீண்ட தொடர்களில் அணியில் இடம்பெறவில்லை. அவர் படேல், நிவாஸ் புரமோட்டர்ஸ் என்று நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த நிறுவனம் டெல்லியை சேர்ந்த...
மேலும்

உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்

புடாபஸ்ட், ஜூலை 27: ஹங்கேரியில் நடைபெற்ற பிரீஸ்ட்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில், 22 வயதான பிரிட்டன் வீரர் ஆடம் பியட்டி உலக சாதனை படைத்துள்ளார். ஐரோப்பியாவின் ஹங்கேரியில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பிரிட்டனின் 22 வயதான ஆடம் 50 மீட்டர் பிரீஸ்ட்ஸ்ட்ரோக் போட்டியில் பந்தய தூரத்தை 26.10 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த வெற்றியை...
மேலும்

நீச்சல் போட்டியில் உலக சாதனை

புடாபஸ்ட், ஜூலை 27: உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியின் மகளிர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில், கனடா வீராங்கனை கைலீ மாஸே தங்கப்பதக்கம் வென்று உலக சாதனை படைத்தார். ஐரோப்பியாவின் ஹங்கேரியில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், மகளிருக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் கனடா வீராங்கனை கைலீ மாஸே, 58.10 வினாடிகளில், இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம், அவர்...
மேலும்

விதி விளையாடுகிறது : ஷிக்கர் தவான்

காலே, ஜூலை 27: நான் ஒன்று நினைத்தால் விதி வேறு மாதிரி நினைக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வீரர் தவான் கூறினார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, தவான், புஜாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 3 விக்கெட் இழப்புக்கு...
மேலும்

டிஎன்பிஎல்: தூத்துக்குடி அணிக்கு 2வது வெற்றி

நத்தம், ஜூலை 27: டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் தூத்துக்குடி அணி திருச்சி வாரியர்சை 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடந்து வருகிறது. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர்...
மேலும்

வெற்றி ரகசியம் சொல்லும் ஹர்மன்பிரீத் கவுர்

புது டெல்லி, ஜூலை 27: ஆண்களுடன் பயிற்சியில் ஈடுபட்டதே சிக்சர்கள் அடிக்கும் திறமையை தாம் வளர்த்துக் கொள்வதற்கு காரணம் என இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டியில் ரன்குவிக்கும் வேகத்தில் தாம் ஆட்டமிழந்ததாக அவர் கூறியுள்ளார். உடல்திறனை சீராக வைத்துக்கொள்ள பயிற்சியின் போது கால்பந்து விளையாடுவதாகவும் அவர் கூறினார். மகளிர் உலகக்கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதியாட்டங்களில் ஹர்மன்பிரீத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டை...
மேலும்

ரசிகர்களின் விமர்சனம்; மனமுடைந்த மித்தாலி ராஜ்

லண்டன், ஜூலை 26: உலகக்கோப்பை இறுதிபோட்டியில் ரன் அவுட்டானதை ரசிகர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதால் மித்தாலி ராஜ் மனமுடைந்துள்ளார். இங்கிலாந்தில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதன் இறுதிபோட்டியில்,இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை தவறவிட்டது. இப்போட்டியில் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய கேப்டன் மித்தாலி ராஜ், ரன் அவுட்டானார். இதை சிலர் வேண்டும் என்றே...
மேலும்

தரநிலையில் முன்னேறிய ஹர்மன்பிரீத் கவுர்

புது டெல்லி, ஜூலை 26: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சர்வதேச தரநிலைப்பட்டியலில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். 13-வது இடத்தில் இருந்த ஹர்மன்பிரீத் கவுர் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, தரநிலையில் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லேனிங் முதலிடத்திலும், இந்திய அணிக் கேப்டன் மிதாலி...
மேலும்

சென்னை ஸனூக்கர் அணியை வாங்கினார் விஜயகாந்த் மகன்

ஐதராபாத், ஜூலை 26: சென்னை பேட்மின்டன் அணியை வாங்கிய கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தற்போது ஸ்னூக்கர் லீக்கின் சென்னை ஸ்ட்ரிக்கர்ஸ் அணியையும் வாங்கியுள்ளார். சென்னை ஸ்மாஷர்ஸ் அணியில் பி,வி .சிந்து உள்ளிட்ட பல திறமை வாய்ந்த வீரர்களை தேர்வு செய்தது போல் இந்த சென்னை ஸ்ட்ரிக்கர்ஸ் அணியிலும் பெங்களூரை சேர்ந்த பங்கஜ் அத்வானி, சென்னையை சேர்ந்த வித்யா பிள்ளை, பஞ்சாப்பை சேர்ந்த தர்மிந்தர் லில்லி...
மேலும்